தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

மணமேல்குடி, ஜூன். 20-

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட   துணைச் செயலாளர் சேக் அப்துல்லா தலைமை வகித்தார். கிளை தலைவர் சர்ஜுன், செயலாளர் ஃபைரோஸ்கான், பொருளாளர் ஆதில், துணைத் தலைவர் ராஷிக், துணை செயலாளர் ஹுசைன்,  மருத்துரணி செயலாளர் அனஸ், மாணவரனி நியாஃப் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மருத்துவ தகுதி அடிப்படையில் 35 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனை க்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும் மருத்துவர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர்  சபியுல்லா நன்றியுறை நிகழ்த்தினார்.


அவர் கூறும்போது “ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார். இறுதியாக, இம்முகாமில் பங்களிப்பு செய்த இரத்த வங்கி மேலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மருத்துவ குழுவிற்கும், மேலும் இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை உறுப்பினர்கள், மாணவரணி, தொண்டரணி மற்றும்  கிளை நிர்வாகத்திற்க்கும் நன்றியினைத் தெரிவித்தார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button