அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம்.
பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்த பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவுவதற்காக தமிழக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்.
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையால் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குகிறது.
ஆதரவற்ற இளம்பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில் 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
திட்டம் 1:-
- பட்டதாரி அல்லாதவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
திட்டம் 2:-
- பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.
- 50 ஆயிரம் உதவி தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் கல்லூரியில் படித்த சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
- அரசால் அங்கீகாரம் பெற்ற தொலை தூர கல்வியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு:
- விண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்கப்பட வேண்டும்.
- இ- சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- இந்த திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.
- மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
https://www.myscheme.gov.in/schemes/atnmasfogi என்ற இணையதளத்தில் சரி பார்க்கவும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1