அன்னவாசலில் சிறுமியின் மூக்கில் சிக்கிய மாதுளை விதை அகற்றம்.
அன்னவாசல், மார்ச்.28-
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை சேர்ந்தவர் முகமது நிசாருதீன். இவரது மகள் மதினா (வயது 3). சிறுமி வீட்டில் இருந்த மாதுளை பழத்தை சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாதுளை விதை சிறுமியின் மூக்கினுள் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமலும், மூச்சு விடமுடியாமலும் சிறுமி மதினா துடித்தாள். இதையடுத்து, சிறுமியை பெற்றோர் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் மணியன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிறுமிக்கு சிகிச்சை அளித்து மூக்கில் சிக்கியிருந்த மாதுளை விதையை வெளியே எடுத்தனர். தற்போது அந்த சிறுமி நலமுடன் உள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1