அக்பர், சீதா சிங்கங்கள் பெயர் மாற்றம் செய்த பூங்கா நிர்வாகம்.
மேற்குவங்க உயர்நீதிமன்ற உத்தரவுபடி அக்பர், சீதா சிங்கங்கள் பெயர் மாற்றம் செய்த பூங்கா நிர்வாகம்.
சிலிகுரி உயிரியல் பூங்காவில் ‘சீதா’ என்ற பெண் சிங்கம் மற்றும் ‘அக்பர்’ என்ற ஆண் சிங்கத்தை ஒரே பகுதிக்குள் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் அம்மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது, மேலும் ‘சீதா’ சிங்கம் மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என VHP அந்த மனுவில் குறிப்பிட்டது.
திரிபுராவில் உள்ள செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.அதில் ஆண் சிங்கத்தின் பெயர் அக்பர். பெண் சிங்கத்தின் பெயர் சீதா. இந்நிலையில், அந்த இரண்டு சிங்கங்களும் ஒரே பகுதியில் அடைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 13 ஆம் தேதி சிங்கங்கள் பூங்காவிற்கு வந்தவுடன் பெயர் மாற்றப்படவில்லை என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள உயிரியல் பூங்காவில் அக்பர் எனப் பெயரிடப்பட்டுள்ள ஆண் சிங்கத்துடன் சீதா எனப் பெயரிடப்பட்டிருக்கும் பெண் சிங்கத்தை ஒன்றாக அடைக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் இந்து பரிஷத் அமைப்பு மனு தாக்கல் செய்திருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
மேலும் அக்பர் ஒரு முகலாயப் பேரரசராக இருந்ததாலும், வால்மீகியின் ‘ராமாயணத்தில் ‘ சீதை ஒரு கதாப்பாத்திரம் என்பதாலும் , இந்துக் கடவுளாக மதிக்கப்படுவதாலும் இது தவறானது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த மனு நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா பெஞ்ச் முன் 16 பிப்ரவரி 2024 அன்று குறிப்பிடப்பட்டு பிப்ரவரி 20 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் வனத் துறை அதிகாரிகள் மற்றும் பெங்கால் சஃபாரி பூங்காவின் இயக்குனரும் இந்த வழக்கில் தரப்பினர் ஆக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நீதிபதி பட்டாச்சாரியா, ”சீதா மற்றும் அக்பரின் பெயரை சிங்கங்களுக்கு சூட்டி ஏன் சர்ச்சையை உருவாக்குகிறீர்கள்? நீங்கள் ஒரு பொதுநல அரசு மற்றும் மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கத்துக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கு வங்க அரசு சிங்கங்களின் பெயரை மாற்றவேண்டும்” என உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு ‘சூரஜ்’ என்ற பெயரும், சீதா பெண் என்ற சிங்கத்திற்கு ‘தயா’ என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்காள அரசு பரிந்துரைத்துள்ளது