மணமேல்குடி ஒன்றியத்தில்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – எழுதப் படிக்க தெரியாத கற்போரை கண்டறியும் கணக்கெடுப்பு பணிக்கான கூட்டம்.
மணமேல்குடி,மே.02-
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – எழுதப் படிக்க தெரியாத கற்போரை கண்டறியும் கணக்கெடுப்பு பணிக்கான கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் இவர்களின் வழிகாட்டுதலின்படி,
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – கற்போரை கண்டறியும் கணக்கெடுப்பு பணி கூட்டமானது மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமையில் தொடங்கியது.
மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி மற்றும் மணமேல்குடி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ் மொழியில் எழுதப் படிக்க தெரியாத மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை எண்ணறிவை பெறாத நபர்களை இக்கணக்கெடுப்பின் வாயிலாக கண்டறிய வேண்டும் என்றும், ஊர் பெயரை வாசிக்கச் செய்தும் தனது பெயரை எழுதச் சொல்லியும் சிறிய அடிப்படை கணக்குகளில் திறன்களை சோதித்தும் எழுத படிக்கத் தெரியாத வரை அடையாளம் காண வேண்டும் என்றும்,
அனைத்து கிராம பஞ்சாயத்து வார்டு அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத அனைத்து கல்லாதோரின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும் என்றும்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளின் அருகாமை குடியிருப்புகளில் வசிக்கும் கல்லாதரின் விவரங்களை அந்தந்த பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பள்ளி விவர பதிவேட்டின் படி சேகரிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு கிராமம் வார்டு அளவில் ஆரம்ப சுகாதார நிலையில் அங்கன்வாடி மையத்தில் ஏற்கனவே பராமரிக்கப்படுகின்ற குடும்ப விவரம் கணக்கெடுப்பு பதிவேட்டில் கல்வி நிலை என்கிற பகுதியில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்காத படிக்க தெரியாதவரின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உதவியுடன் பணியினை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் அங்கையர்கண்ணி கணக்காளர் கலைச்செல்வன்
இயன் முறை மருத்துவர் செல்வக்குமார் சிறப்பாசிரியர்கள் கோவேந்தன் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.