திருச்சி விமான நிலையத்தில் ரூ.21.25 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
செம்பட்டு, அக். 25 –
திருச்சி விமான நிலையத்தில் ரூ.21.25 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பயணியிடமிருந்து சோதனை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏஷியா விமானம் திருச்சிக்கு வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணியையும் அவரது உடமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தங்கம் பறிமுதல்
இதில், பயணி தனது உள்ளாடையில் மறைத்து சங்கிலி மற்றும் வளையலாக 292 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.21.43 லட்சம் மதிப்பிலான அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பயணியிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.