தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த பெருநாள் தொழுகை.
கோபாலப்பட்டினம், ஏப்ரல்.10-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை ஜமாத் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
நோன்பு பெருநாள் தொழுகை
தமிழகத்தில் நேற்று 09.04.24 செவ்வாய்க்கிழமை கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி பகுதியில் பிறை தென்பட்டதை அடுத்து இன்று புதன்கிழமை 10.04.24 ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமயகம் அறிவிப்பு செய்தது. இதனை அடுத்து புதன்கிழமை நோன்பு பெருநாள் தொழுகை நடைபெறும் எனவும் அறிவிப்பு செய்தது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை ஜமாத் சார்பாக கோபாலப்பட்டினம் அரண்மனை தோப்பு திடலில் காலை 7.30 மணி அளவில் “நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை” நடைபெற்றது.
பெருநாள் தொழுகை உரை
தொழுகையை தொடர்ந்து சகோதரர் அப்துல் பாரி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு நபிவழியில் தொழுகையினை நிறைவேற்றினார்கள்.
அன்பு வாழ்த்துக்கள்
தொழுகைக்காக வந்த மக்கள் ஈகை திருநாளான பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் தமது வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்து மகிழ்ச்சி பொங்க ஈகை திருநாளை கொண்டாடி புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.
தொழுகைக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.