ஜியோவை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்.
நேற்று ஜியோ நிறுவனம் அனைத்து ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் 12-15% உயர்த்துவதாக அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ப்ரி-பெய்டு, போஸ்ட் பெய்ட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ரூ.179ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 199 ரூபாய் ஆகவும்,
ரூ.455 ஆக இருந்த கட்டணம் 509 ரூபாய் ஆகவும்,
ரூ.265 பிளான் 299ரூபாய் ஆகவும்,
ரூ479 பிளான் ரூ.579ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போன்று தினசரி 2 ஜி.பி. டேட்டாவுடன் கூடிய வருடாந்திர ரீ – சார்ஜ் தொகையானது ரூ. 600 அதிகரிக்கப்பட்டு ரூ. 3599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரீசார்ஜ் கட்டணங்களுக்கான விலை உயர்வு ஜூலை 3 முதல் அமல்படுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1