கோபாலப்பட்டினம் முஸ்லீம் ஜமாஅத் புதிய நிர்வாக தேர்வு கூட்டம்.
கோபாலப்பட்டினம்,ஜூலை.05-
கோபாலப்பட்டினம் முஸ்லீம் ஜமாஅத் புதிய நிர்வாக தேர்வு கூட்டம் இன்று 05.07.24 கோபாலப்பட்டினம் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் கடந்த 16.07.2021 அன்று புதிய ஜமாத் நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
இரண்டு தலைமை கொண்ட ஜமாஅத் நிர்வாகத்தை பொதுமக்கள் மற்றும் அல்வின்னர் வர்த்தக சங்கம் தேர்ந்தெடுத்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அந்த நிர்வாகத்திற்கு மூன்று ஆண்டு காலம் நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது உள்ள ஜமாத் நிர்வாகத்தின் மூன்றாண்டு காலம் பொறுப்பு நிறைவடைந்ததை அடுத்து புதிய ஜமாத் நிர்வாகம் இன்று 05.07.24 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
புதிய ஜமாத் நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் கூட்டத்திற்கு கோபாலப்பட்டினம் ஜமாத்தார்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறந்த நிர்வாகத்தை அமைக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.