கோபாலப்பட்டினத்தில் குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆய்வு – ஜமாஅத் நிர்வாகம் அறிவிப்பு.
கோபாலப்பட்டினம்,செப்.21-
கோபாலப்பட்டினத்தில் குப்பை கொட்டுவதற்கு ஒரு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்தும், குப்பைகளை மறுசுழற்சி செய்வது குறித்தும் நாளை 22-09-24 ஞாயிற்றுக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஆய்வு செய்யப் போவதாக கோபாலப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கென்று 42 நபர்கள் அடங்கிய குழு ஒன்றை உருவாக்கி அந்த குழுவினர் தலைமையில் ஆய்வு செய்யப் போவதாகவும் ஜமாத் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளனர்.
இது குறித்து ஜமாஅத் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டனி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டினத்தில் கடந்த 20-09-2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு நடந்த மகா சபையில் GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக நமது ஊரில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நிரந்தர தீர்வு (இடம்) காண வேண்டும் என்று கோபாலப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகத்திற்கு கோரிக்கை கடிதம் கொடுத்தனர்.
மகாசபையில் ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக பசீர் மற்றும் பொதுமக்கள் மற்றும் மேல்மட்ட குழு உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதம் நடந்தது.
அதனடிப்படையில் கீழ்க்கண்ட உறவுகளை குழுவாக அறிவித்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22-09-2024 அஸர் தொழுகைக்கு பிறகு குப்பை கொட்டுவதற்கு ஒரு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது என்றும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய ஏற்பாடுகள் செய்வது என்றும் நிர்வாகிகளின் தரப்பில் உறுதி கூறப்பட்டது.
குழு உறுப்பினர்கள்
- ஜமாஅத் நிர்வாகிகள் – 7 நபர்கள்
- உயர்மட்ட குழு உறுப்பினர்கள் – 9 நபர்கள்
- GPM சொந்தங்கள் குழுமம் – 10 நபர்கள்
- GPM மக்கள் மேடை குழுமம் – 10 நபர்கள்
- வ.இ. சாகுல் ஹமீது
- முகம்மது ஆசிக்
- ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக பசீர்
- ஹலீம்
- நலீம்
- மீனவர் சங்க தலைவர் – பசீர
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.