இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.
2024 மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது.
கடந்த முறை நடந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி இராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அதேபோன்று 2024 மக்களவைத் தேர்தலிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஏணி சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1