அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய ராணுவத்தினர் வருகை கல்லூரியின் செயல்பாடுகளுக்கு பாராட்டு.
அறந்தாங்கி,ஆகஸ்டு.23-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் பிறந்த ராணுவ வீரர்கள் வருகை புரிந்து அறந்தாங்கி பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள், பொறியியல், பாலிடெக்னிக் பட்டதாரி இளைஞர்கள் ராணுவத்தில் பணிபுரிவதற்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் பற்றியும், அப்பணிகளில் பணிபுரிவதற்கு பயிற்சி வகுப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அறந்தாங்கி பாலிடெக்னிக்கில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்ததை பார்த்து மன மகிழ்ந்து முதல்வரையும் பாராட்டி, கல்லூரியின் அனைத்து மாணவர்களுக்கும் மிகச் சிறந்த ராணுவ பயிற்சிக்கான திட்டத்தின் தகவல்களை வழங்கினர்.
கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்புகள், மூலிகை தோட்டம் , பழத்தோட்டம் மற்றும் பூந்தோட்டம் ஆகியவற்றைப் பார்த்து வியந்து பாராட்டினார்கள்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1